இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரசுக்கு ஆதரவை தெரிவிப்பதாக திமுக அறிவித்துள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் நபர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் நடக்க உள்ள கூட்டம் என்பதால் இன்றைய கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுபிக்ஷா நிதி நிறுவன அதிபர் சுபிக்ஷா சுப்ரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆஸி.க்கு எதிரான டி 20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.வரும் 23ம் தேதி தொடங்க இருக்கும் இத்தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் காட்டமாக கூறி உள்ளார். காவிரி நதிநீர் விவகாரத்தை இரு மாநிலங்களும் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து 549வது நாளாக இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறி உள்ளார்.
உத்தரபிதேச மாநிலம், சம்சாபாத் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு திருமண நிகழ்வில் விருந்தின் போது மோதல் எழுந்தது. உணவு பரிமாறும் போது ரசகுல்லா தீர்ந்து போனதால் சாப்பிட வந்தவர்கள் சத்தம் போட அது பின்னர் தாக்குதலாக மாற, ஒருவரையொருவர் அடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.