Sunday, May 04 12:31 pm

Breaking News

Trending News :

no image

வந்தாச்சு…! 1,000 மடங்கு ஆபத்தான வைரஸ்…! அலறும் அமெரிக்கா


கொரோனாவை விடுங்க… அதை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது இந்த டெல்டா வைரஸ் என்று அஞ்சி நடுங்க ஆரம்பித்து இருக்கிறது வல்லரசான அமெரிக்கா.

எப்போது போகும்..? எப்படி போகும்…? என்று தெரியாத அளவுக்கு இருக்கிறது இந்த கொரோனா வைரசின் தாக்கம். உலக நாடுகளில் குறைந்து விட்டது போன்று காணப்பட்டாலும் நிலைமை அப்படி இல்லை என்று தான் மற்ற நாடுகளில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

முதல் அலை, 2வது அலை என்று வரிசை கட்டிய கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. 200க்கும் மேற்பட்ட நாடுகள் இன்னமும் கொரோனாவால் விழி பிதுங்கி நிற்கிறது. குறிப்பாக அமெரிக்கா இப்போது கொரோனா முதல், 2வது அலையை காட்டிலும் அலறி வருகிறது.

அதற்கு காரணம் டெல்டா…. வைரஸ். இந்த ஆபத்தான வைரஸ் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் படு வேகமாக உலா வர ஆரம்பித்து இருக்கிறது. இந்த டெல்டா வைரசானது சின்னம்மை போல ஈசியாக பரவக்கூடியது, கொரோனாவை ஆவிட ஆயிரம் மடங்கு அதிகமானது, வீரியமிக்கது என்று அலறி துடிக்கிறது அமெரிக்கா.

தங்களது நாட்டில் தடுப்பூசிகள் டெல்டா வைரசுக்கு எதிராக வேலை செய்யவில்லை, மக்களே பாதுகாப்புடன் இருங்கள் என்று அமெரிக்கா அறிவித்து விட்டது. இந்த வைரஸ் அமெரிக்காவை விட்டு வேறு நாடுகளுக்கு பரவி விடக்கூடாது, கவனம் என்றும் அந்நாட்டு சுகாதார மையம் அலறி போய் அட்வைஸ் செய்திருக்கிறது.

Most Popular