Sunday, May 04 12:24 pm

Breaking News

Trending News :

no image

ஸ்டாலின் டெல்லி பயணம்…! டுவிட்டரில் பாஜக ஆதரவாளர்கள் செய்த 'வேலை'…!


சென்னை: தமிழக முதல்வர் டெல்லி சென்றுள்ள நிலையில் பாஜக ஆதரவாளர்கள் #StalinGoBackModi என்பதை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழகத்தின் நலனுக்காக கோரிக்கை மனுவுடன் டெல்லி சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். டெல்லியில் அவருக்கு அரசு சார்பில் சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது.

நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம், எழுவர் விடுதலை என பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் ஸ்டாலினின் இந்த டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி பாக்கி தொகை பற்றிய எதிர்பார்ப்பும் ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் முக்கியமாக கணிக்கப்படுகிறது.

இப்படி பல எதிர்பார்ப்புகள் தமிழக மக்களிடம் இருக்க பிரதமர் மோடியை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின். டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் இருக்க… டுவிட்டரில் வேறொரு விஷயம் டிரெண்டிங்காகி வருகிறது.

அதாவது #StalinGoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போது gobackmodi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகும்.

ஆனால் இப்போது அதற்கு பதிலடி தரும் வகையில் டெல்லியில் ஸ்டாலின் உள்ள நிலையில், #StalinGoBackModi என்ற ஹேஷ்டேக் பாஜக ஆதரவாளர்கள் டிரெண்டிங்காக்கி வருகின்றனர். திமுகவின் கடந்தகால செயல்களுக்கு பதிலடி தரும் வகையில் மோடியிடம் செல்லுங்கள் ஸ்டாலின் என்று அவர்கள் இதை டிரெண்டாக்கி உள்ளனர்.

Most Popular