பிஎஸ்பிபி பள்ளி… 11 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி சொன்ன விஷயம்…!
சென்னை: 11 ஆண்டுகளுக்கு முன்பு பிஎஸ்பிபி பள்ளி பற்றி கருணாநிதி கூறிய ஒரு விஷயம் இப்போது இணையத்தில் தெறி ரகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள பிரபல பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் செய்த பாலியல் சேட்டைகள் தான் இப்போது ஹாட் டாபிக். 5 ஆண்டுகளாக மாணவிகளிடம் அவர் நடத்தி பாலியல் சீண்டல்கள் புத்தகம் போடும் அளவுக்கு இருப்பதாக விசாரணை களத்தில் இருக்கும் போலீசார் கூறுகின்றனர்.
அந்த பள்ளியை பற்றி தினசரி ஏதேனும் சில விஷயங்கள் இணையத்தில் உலா வருகிறது. அப்படித்தான் 11 ஆண்டுகளுக்கு முன்பாக கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கூறியது என்ன என்பது ஓரு விஷயம் இணையத்தில் ரவுண்டு அடிக்க ஆரம்பித்து இருக்கிறது.
முழு விவரம் இதுதான்: அது 201ம் ஆண்டு காலக்கட்டம். அப்போது தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. பிஎஸ்பிபி பள்ளி நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் தாயாரால் ஏற்படுத்தப்பட்ட பள்ளியாகும். ஒய்ஜி மகேந்திரா தொடர்ந்து 50 ஆண்டுகள் மேடை நாடகங்களில் நடித்ததற்காக 2010ம் ஆண்டு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடத்துவதாக ஏற்பாடு. விழாவில் சிவாஜியின் வியட்நாம் வீடு படத்தில் அவரது கேரக்டரான பிரஸ்டிஜ் பத்மநாபன் கதாபாத்திரத்தில் நடித்தார். விழாவில் தலைமை ஏற்று கருணாநிதி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஒய்ஜி மகேந்திராவின் பெற்றோர் எனது குடும்பத்துக்கு நீண்ட காலமாக தெரிந்தவர்கள். என்னை இந்த விழாவுக்கு அழைக்க வீட்டுக்கு வந்தனர். உரிமையோடு வர வேண்டும் என்று அழைத்தனர். அப்போது எனது அவர்களின் காதில் விழாத வகையில் ஒரு விஷயம் சொன்னார்.
என் பேரனுக்கு உங்கள் பள்ளியில் படிக்க ஒரு சீட் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டீர்கள். இப்போது விழாவுக்கு கூப்பிடுகிறீர்களே? என்று கூறிய போது வியட்நாம் நாடகத்தில் வரும் சும்மா இரு என்ற வசனத்தை நான் கூறி அவரின் வாயை பொத்த வேண்டியதாயிற்று.
முதலமைச்சர் வீட்டு பேரனாக இருந்தாலும் சட்டப்படி பள்ளியில் சேர்ப்போம் என்பதால் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒய்ஜி மகேந்திராவால் பிரஸ்டிஜ் பத்மநாபன் கதாபாத்திரம் நடிக்க முடிந்தது என்று கருணாநிதி பேசினார். இப்போது சமூக வலைதளம் முழுக்க இந்த விஷயம் தான் வைரலாகி இருக்கிறது.