கடைசியில் கூட்டணியில் இணைந்த தேமுதிக…! 60 தொகுதிகளும் ஒதுக்கீடு
சென்னை: சட்டசபை தேர்தலில் அமமுக கூட்டணி அமைத்திருக்கிறது தேமுதிக.
கூடுதல் தொகுதிகள், தேர்தல் செலவு என ஏகத்துக்கும் டிமாண்ட் வைக்க அவை அனைத்தும் நிறைவேறாத காரணத்தால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. பின்னர் திமுகவுடன் பேச்சு நடத்தியதாகவும் கூறப்பட்டது.
அது மட்டுமல்லாமல் டிடிவி தினகரனுடன் தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பேச்சுகள் உலா வந்தன. ஆனால் மறுபக்கம் டிடிவி தினகரன் தமது கட்சி வேட்பாளர்கள் பட்டியலையும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளையும் அறிவித்து கொண்டே இருந்தார்.
இந்நிலையில், தொடர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை பெற்று கொண்டார் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன். விரைவில் கூட்டணி அறிவிப்புடன், தேமுதிக வேட்பாளர்களி முழு பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.