கொரோனாவுக்கு முன்னாள் முதலமைச்சர் பலி….!
ஜெய்ப்பூர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் பெஹாடியா காலமானார். அவருக்கு வயது 89.
நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. தினசரி பாதிப்பையும், பலி எண்ணிக்கையையும் குறைக்க மத்திய,மாநில அரசுகளும் போராடி வருகின்றன.
இந் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் பெஹாடியா காலமானார். 1980ம் ஆண்டுகளில் ராஜஸ்தானின் முதலமைச்சராக காங்கிரஸ் சார்பில் இருந்தவர்.
அதன்பிறகு, பீகார், அரியானா மாநில ஆளுநராக இருந்தார். பெஹாடியா மறைவுக்கு காங்கிரஸ் தலைமை இரங்கல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் தமது இரங்கலை அறிவித்துள்ளார்.