பெரியார் முந்தா நாள் பிறந்து இறந்த மனுஷன்…! போட்டு தாக்கிய ஹெச். ராஜா
சென்னை: கனல் கண்ணனை மிரட்டுவதற்கு 12 போலீசார் அவரது வீட்டுக்கு சென்றதாக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கூறி உள்ளார்.
பிரபல ஸ்ட்ன்ட் மாஸ்டரான கனல் கண்ணன் அண்மையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசிய வீடியோ இணையதளங்களில் பெரும் வைரலானது.
இதையடுத்து கனல் கண்ணன் மீது நடவடிக்கை கோரி, திக, தபெதிக தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டு இருந்தது. அதன்பேரில் 3ம் தேதி கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலகம் செய்ய தூண்டுதல், அவதூறு பரப்பி மக்களிடையே விரோதத்தை தூண்டுவது ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவாகி உள்ளது.
அவரை கைது செய்ய கனல் கண்ணன் வீட்டுக்கு போலீசார் சென்று அவர் இல்லாததால் திரும்பி வந்தனர். இந் நிலையில் கனல் கண்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்து முன்னணி உரிமை மீட்பு மாநாட்டில் கனல் கண்ணன் ஒரு கருத்தை கூறி உள்ளார். உடனடியாக அவரது வீட்டுக்கு 12 போலீசார் சென்றனர். எதற்கு என்றால் அவரை மிரட்ட…இதே நடராஜரை இழிவுபடுத்தி யூடியூபில் பேசியவர் வீட்டுக்கு பாதை தெரியவில்லையா.-?
முந்தா நாள் பிறந்து இறந்துபோன மனிதனை இழிவாக பேசக்கூடாதா? என்ன தப்பு இருக்கு? யூடியூப்பில் பேசியவரை கைது செய்ய திராணியில்லாத, வக்கில்லாத காவல்துறை கனல் கண்ணன் வீட்டுக்கு சென்றது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.