ரூ.600… ஒரு பிஸ்கட் பாக்கெட் விலை…! கதறும் இலங்கை மக்கள்
கொழும்பு: ஒரு பாக்கெட் சாக்லேட் பிஸ்கட் 600 ரூபாய்க்கு இலங்கையில் விற்கப்படுகிறது.
உலக நாடுகள் எதிர்பார்க்காத ஒன்று… ஆனால் உள்ளூர் மக்கள் தொடர்ந்து இதுபற்றி கூறிக் கொண்டே வந்தனர். அந்த உண்மை ஒருநாள் நனவாக இப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது இலங்கை.
தொடர் அரசியல் குழப்பம், அரசியல்வாதிகளின் ஊழல், மக்கள் புரட்சி என பல வடிவங்களில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது தெரியாத நிலை தான் இலங்கையில் காணப்படுகிறது.
பாதுகாப்பற்ற, அசாதாரணமான சூழல் நிலவுவதால் என்னவோ விலைவாசி எங்கோ போய்விட்டது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு, உணவு பொருட்கள் பற்றாக்குறை, தொடர் மின்வெட்டு என்றும் இன்னமும மக்களின் அவஸ்தை தொடர்கிறது.
உணவுகள், மருந்துகள் கிடைக்காமலும் மக்கள் தவிக்கும் நிலையில் பிஸ்கெட் பாக்கெட் 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இத்தனைக்கும் 100 ரூபாய்க்கு இந்த பாக்கெட் கடந்த வாரம் விற்பனையானது. தொடரும் இந்த விலைவாசி எங்கோ போய் முடியுமா என்று கலக்கத்தில் நாட்டு மக்கள் உள்ளனர்.