எப்படி இருக்கிறார் சிவசங்கர் பாபா…? போலீசார் சொன்ன முக்கிய விஷயம்
சென்னை: உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதால் சிவசங்கர் பாபா விரைவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
எப்படியாவது இந்தியாவில் இருந்து தப்பி செல்ல வேண்டும் என்று நினைத்தவர் சிவசங்கர் பாபா. ஆனால் பாலியல் புகாரும், அதை தொடர்ந்து காவல்துறை நடவடிவக்கையும் தீவிரமாக இருக்க டெல்லியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மாரடைப்பு ஏற்பட, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது சிஷ்யைகள், உடந்தையாக இருந்தவர்கள் என ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் மருத்துவமனையில் சிவசங்கர் பாபாவின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் கூறப்பட்டது.
அது மட்டும் அல்லாமல், உடல்நிலை முன்னேற்றம் காரணமாக, ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுவார் என்று சிபிசிஐடி தகவல் வெளியிட்டு உள்ளது. அதன் பிறகு அடுத்தக்கட்ட விசாரணை நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.