வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு..! தேர்தல் களத்தில் இறங்கிய பாஜக
டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர்களில் குறிப்பிடத்தக்க நபராக இருப்பவர் வானதி சீனிவாசன். அவர் இப்போது பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று அதற்கான உத்தரவை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்காகவே இந்த நியமனம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.