Sunday, May 04 12:36 pm

Breaking News

Trending News :

no image

கருப்பு பூஞ்சையால் கண்பார்வை பறி போன கொடூரம்…. தடுக்க சூப்பர் வழி…!


சென்னை: கருப்பு பூஞ்சை தொற்றால் 30 பேர் கண் பார்வை பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலை அதை தடுக்க என்ன வழி என்ற விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

இந்த கொரோனாவின் போக்கு எப்படி இருக்கிறது என்பது புரியாத புதிராக தான் இருக்கிறது. தொடக்கத்தில் இதன் தாக்கம் இவ்வளவு வீரியமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

ஆனால் இப்போது தாக்கம் குறைந்துவிட்டாலும், கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு விசித்திரமான கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்று தான் கருப்பு பூஞ்சை தொற்று. கொரோனா சிகிச்சையின் போது தரப்படும் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகளின் தாக்கம் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கண் பார்வையை பறித்துவிடுகிறது.

கோவையில் கருப்பு பூஞ்சை தாக்கியவர்களில் 30 பேரின் பார்வை இப்படித்தான் பறிபோய் இருக்கிறது. கொரோனா குணமானாலும் இதுபோன்ற உடல்நிலை பாதிப்புகள் மக்கள் இடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று கூறலாம்.

இது ஒரு பக்கம் இருக்க…. இந்த நோய்க்கான அறிகுறிகள் என பல அறிகுறிகள் கூறப்படுகின்றன. ஈரப்பதம் இருக்கும் முக கவசங்கள் அணியக் கூடாது என்பதை பின்பற்றினால் கருப்பு பூஞ்சை தொற்று பரவுவது தடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

சளியுடன் ரத்தம் வருதல், முகத்தில் வலி, தலைவலி, பார்வை மங்குதல் இதன் அறிகுறிகள் என் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. வேறு ஏதேனும் வித்தியாசமான மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக ENT மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

கோவையில் கொரோனா தொற்றில் இருந்து  குணம் பெற்றவர்களில் 30 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்றால் கண் பார்வை பறிபோயிருக்கிறது. கொரோனா சிகிச்சைக்கு பின்னரும், ரத்தத்தில் சர்க்கரை அளவு எப்படி உள்ளது என்பதை தொடர் பரிசோதனைகள் மூலம் கவனிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Most Popular