சாய்பாபா மீது கஞ்சா அடித்து புகைவிடும் பிரபல நடிகை…! வைரல் வீடியோ
சென்னை: சாய்பாபா படத்தின் மீது கஞ்சா புகையை இழுத்துவிடும் நடிகை மீரா மிதுனின் வீடியோ இணையத்தில் அர்ச்ச்னைகளுடன் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
தாம் பிரபலம் ஆக வேண்டும் என்றால் சர்ச்சையாக ஏதாவது பேசி அல்லது ஏதாவது செய்தால் போதும் என்று நினைப்பவர்கள் உண்டு. அதுவும் திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி ஏதாவது தெரியாமல் பேசியோ, செய்தோ இருந்தால் ஒரேநாளில் அனைவர் கவனமும் அவர் பக்கம் தான் இருக்கும்.
இப்போதுள்ள உலகம், சமூக வலைதளங்களின உலகமாக இருப்பதால் எந்த ஒரு விஷயமும் எளிதில் மற்றவர்களை சென்று சேர்ந்துவிடும். இப்படி பிரபலங்களை பற்றி இஷ்டத்துக்கு பேசி புகழை அடைய முயற்சிக்கும் நபர்களில் பிரதானமாக இருப்பவர் நடிகை மீரா மிதுன்.
தமிழ் செல்வி என்ற சொந்த பெயரை மீரா மிதுன் என்று மாற்றிவிட்டு வலம் வரும் அவர் இப்போது சிறையில் கம்பிகளுக்கு பின்னால் இருக்கிறார். சில மாதங்கள் முன்பு நடிகர்கள் சூர்யா, விஜய் பற்றி பேச பின்னர் வாங்கி கட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்டார்..
நயன்தாரா, த்ரிஷா ஆகிய சீனியர் நடிகைகளையும் வம்புக்கு இழுத்தார். அதன் பிறகு பட்டியலின மக்கள் பற்றியும், பட்டியலின இயக்குநர்களையும் பற்றி விமர்சித்து பேச… வழக்குகள் பாய்ந்து, கடைசியில் கேரளாவில் பதுங்கிய அவரை தமிழக போலீஸ் கொத்திக் கொண்டு வந்திருக்கிறது.
சென்னையில் மத்திய குற்றப்பிரிவு ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு கொண்டு வந்தபோது போலீசார் சாப்பாடு போடவில்லை, துன்புறுத்துகிறார்கள் என்று கூறி வம்பு செய்தார். காவல்துறையினருடன் உரிய விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் 27ம் தேதி சிறையில் வைக்க உத்தரவிட, இப்போது சிறைகம்பிகளுக்கு பின்னால் மீரா மிதுன் உள்ளார். அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அதே தருணத்தில் அவரின் மற்றொரு வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீடியோவில் கஞ்சா புகையை சாய்பாபா படத்தின் மீது ஊதும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. வலது கையில் கஞ்சா புகையை இழுத்துவிட்டு, அருகில் இருக்கும் சாய்பாபா படத்தின் மீது ஸ்டைலாக ஊதி தள்ளுகிறார். அந்த வீடியோவை ஷூட் செய்யும் ஒருவர் சொடுக்கு போட்டு ஆபாச செய்கை காண்பிக்கும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.
மீரா மிதுன் இப்போது சிறையில் இருந்தாலும் அவரது இந்த கஞ்சா பிளஸ் சாய்பாபா வீடியோ இணையத்தில் தெறி ரகமாகி இருக்கிறது. வீடியோவை பார்க்கும் சாய்பாபா பக்தர்கள் மீரா மிதுனை திட்டி கடுமையாக சாபம் விட்டு வருகின்றனர்.