CM ஸ்டாலினை மறித்த முதியவர்…! தப்பு நடந்துபோச்சே…?
சென்னை; முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சியின் போது முதியவர் சந்தித்து பாராட்டி பேசி உள்ள வீடியோ பார்ப்போரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினசரி எங்கிருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சி செல்வது வழக்கம். சென்னையில் உள்ள தருணங்களில் அவருடன் மா. சுப்ரமணியமும் செல்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அப்படித்தான் வழக்கம் முதலமைச்சர் ஸ்டாலின் அடையாறில் வாக்கிங் போன போது சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவ்வழியாக சென்ற முதியவர் ஒருவர் முதலமைச்சரை சந்தித்து உரையாடி உள்ளார். தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், மக்கள் நலமாக உள்ளதாக கூறி இருக்கிறார்.
மேலும், அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார், கோவில் ஆக்ரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. ஏராளமான கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது என்று கூறினார். அவரின் பேச்சை கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கிங் வீடியோ பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் தருணத்தில் அதற்கு எதிராகவும் விமர்சனங்கள் தற்போது குவிய ஆரம்பித்துள்ளன. அந்த வீடியோ இந்த செய்தியின் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
எப்படி ஒரே நபர் எப்போதும் முதலமைச்சரை சந்தித்து பேசுகிறார்? பாராட்டுகிறார்? பல வேஷங்களில் வந்து சந்திக்கிறார்?
அதே டெய்லர், அதே வாடகை….
இது ஷூட்டிங் என்று தெரியாமல் அந்த பெரியவர் முதலமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார், சட்டை மட்டும் வேற, வேற… மத்தது எல்லாம் ஒண்ணுதான் என்று கருத்துகளை பார்ப்போர் பதிவிட்டு உள்ளனர்.