ஆளுநர் உரையில் சொன்னதை நிறைவேற்றிய எடப்பாடியார்…! என்ன விஷயம் தெரியுமா..?
சென்னை: தமிழக அரசினுடைய புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டு உள்ளார்.
சென்னையில் எம்ஆா்சி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் அவர் தொழில் கொள்கையை வெளியிட்டார். புதிய தொழில் கொள்கையை வெளியிட்டதோடு, சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
முன்னதாக தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று ஆளுநா் உரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் நீட்சியாக இந்த கொள்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.