மாணவர்களோடு துணை நிற்போம்…! நீட்டுக்கு எதிராக நடிகர் சூர்யாவின் துணிச்சல் வீடியோ
சென்னை: ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம் என்று நடிகர் சூர்யா வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் நீட் தேர்வு தற்கொலைகள் தொடங்கி உள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் தமிழகத்தில் 3 மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இந்த மரணங்கள் தமிழகத்தை மீண்டும் உலுக்கி இருக்கின்றன. இந் நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நீட் தேர்வு பற்றிய அடுத்த விவாதத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் நடிகர் சூர்யா.
சமமான வாய்ப்புகளை பெற்று தர வேண்டிய அரசு, ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் கல்வி முறையை கொண்டு வருகிறது என்று அறிக்கை வெளியிட்டார். நீதிமன்றத்தையும் தமது அறிக்கையில் அவர் கண்டித்திருந்தார்.
இந் நிலையில், ஒன்றிணைவோம்; மாணவர்களோடு துணை நிற்போம் என்று நடிகர் சூர்யா தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம். ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களடைய கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள். நாம நினைச்சா அதை மாத்திடலாம்” என்று பதிவிட்டுள்ளார்.