டோன்ட் வொர்ரி.. ஹேப்பி..!! தனி ரூட்டில் ஓபிஎஸ்
சென்னை: எதை பற்றியும் கவலைப்படாமல் தன் ரூட்டில் போய் கொண்டிருக்கும் ஓபிஎஸ் அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு உள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் புயலாய் வீசிக் கொண்டு இருக்கிறது. கட்சிக்கு யார் பொது செயலாளர் என்பது பெரும் வம்பாகி இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதற்குள் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் இஷ்டத்துக்கு நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஓபிஎஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறி உள்ளதாவது:
கழக துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் எம்எல்ஏ இன்று முதல் கழக இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். துணை ஒருங்கிணைப்பாளர்களாக குப கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், பிஎச் மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் தவிர எம்சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10 மாவட்ட கழக செயலாளர்களை நீக்கியும் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ஓபிஎஸ்சின் இந்த அறிவிப்பை பார்க்கும் அரசியல் விமர்சகர்கள், ஈபிஎஸ் டெல்லி பயணம் வெற்றியல்ல என்பதை சூசகமாக குறிப்பதாக கூறி உள்ளனர். தொடரும் அறிவிப்புகளால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.