கைசாலாவில் ஓட்டல் ஆரம்பிக்கணும்…! நித்தியானந்தாவுக்கு லெட்டர் போட்ட மதுரைக்காரர்
மதுரை: நித்தியானந்தாவின் கைலாசாவில் ஓட்டல் ஆரம்பிக்க மதுரை ஓட்டல் அதிபர் கடிதம் எழுதி உள்ளார்.
ஆள்கடத்தல், பாலியல் விவகாரம் என ஏக பரபரப்புக்கு ஆளானவர் சாமியார் நித்தியானந்தா. இப்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் கைலாசா என்று ஒரு நாட்டை உருவாக்க போகிறேன், அதற்கென வங்கி, நாணயம் அறிவிக்க போகிறேன் என்று யுடியூபில் வலம் வந்து அறிவித்து வந்தார்.
யுடியூபில் வலம் வருபவரை கண்டுபிடிக்கமுடியாமல் போலீஸ் ஒரு பக்கம் திணற, அவரோ புதிய, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதாவது, தமது கைலாசா நாட்டுக்கு புதிய நாணயங்களை அறிவித்து ஆச்சர்யம் காட்டி இருக்கிறார்.
மொத்தம் 5 வகையான நாணயங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். கால் காசு என்று ஆரம்பித்து 10 காசுகள் வரை இந்த நாணயத்தை நித்தியானந்தா. இந்த நாணயங்களை கொண்டு உலக நாடுகளுடன் வியாபாரம் செய்ய உள்ளதாகவும் கூறி உள்ளார். அதாவது 56 நாடுகளுடன் வர்த்தகம் நடத்த உள்ளாராம்.
நிலைமை இப்படி போக, ஆச்சரியம் தரும் வகையில் மதுரையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் கைலாசாவில் ஓட்டல் தொடங்க அனுமதிக்குமாறு நித்தியானந்தாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
மதுரையைச் சேர்ந்த டெம்பிள் சிட்டி என்ற ஓட்டல் உரிமையாளர் குமார் என்பவர் இந்த கடிதம் அனுப்பி இருக்கிறார். அவரது இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.