புதுச்சேரி காவலருக்கு கொரோனா...! கடைசியில் சட்டசபை வளாகம் மூடல்
புதுச்சேரி: புதுச்சேரியில் காவலருக்கு கொரோனா உறுதியானதால், சட்டசபை வளாகம் புதன்கிழமை வரை மூடப்பட்டது.
புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியாக அவர் சிகிச்சை உள்ளார். இந்நிலையில் சட்டசபை உறுப்பினர்கள்,காவலர்கள், ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் மேலும் 131 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஆகையால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,787 ஆனது. மொத்த உயிரிழப்பு 38 ஆக உள்ளது.