தலையை புடுச்சி, மண்டையில் அடிச்சி…! ஸ்ரீரங்கத்தில் நடந்தது என்ன?
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தருக்கு அடி உதை விழுந்த சம்பவத்தில் உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். தற்போது அய்யப்ப சீசன் என்பதால் தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகம். இப்படிப்பட்ட சமயத்தில் கோயிலில் அய்யப்ப பக்தரை கோயில் ஊழியர்களும், காவலர்களும் அடித்து உதைத்தனர் என்று ஒரு வீடியோ வெளியானது.
ரத்தம் சொட்ட, சொட்ட… பக்தர் ஒருவர் விழுந்து கிடப்பதும் கருவறையில் ரத்தம் சிந்தியதால் அபசகுணம் என்று கோயில் மூடப்பட்டது. உடனடியாக பாஜகவும், வலதுசாரி அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டன அறிக்கை வெளியிட, விவகாரம் அரசியலாக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில் உண்மை என்ன என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. இன்றைய தினம் காலை 7 மணியளவில் காயத்திரி மண்டபத்தில் ஆந்திராவில் இருந்து 34 பக்தர்கள் வந்துள்ளனர். அங்குள்ள உண்டியலை அடித்து அட்டகாசம் செய்து இருக்கின்றனர். அவர்களின் செயலால் அதிக சத்தம் எழுந்தததாக தெரிகிறது.
https://twitter.com/kalgikumaru/status/1734469099114418629/photo/2
இதையடுத்து அங்கு பணியில் உள்ள கோயில் ஊழியர்கள் தட்டிக்கேட்ட மோதல் எழுந்துள்ளது. பணியாளரின் தலையை பிடித்த பக்தர்கள் உண்டியலில் மோதி வன்முறையை கையில் எடுக்க, காவலர்கள் தட்டிக்கேட்டு உள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலே கடைசியில் ரத்தம் சிந்தும் நிலைக்கு காரணமானது.
போலீசாரை திட்டி, down down என்று முழக்கமிட்டு இடையூறு செய்திருக்கின்றனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.