பாஜகவில் இணைந்த பிரபல நடிகர்… அப்படியே கட்சியும்…!
யார் எப்போது எந்த கட்சியில் சேருவார்கள் என்று தெரியாது… இப்போது லேட்டஸ்ட்டாக பாஜகவில் ஐக்கியமாகி இருக்கிறார் நடிகர் சரத்குமார். தமது கட்சியையும் பாஜகவில் அவர் இணைத்து அதிரடி காட்டி உள்ளார்.
லோக்சபா தேர்தல் 2024க்கான களம் பரபரப்பாகி வருகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் களத்தை சூடாக்கி வருகின்றன. திமுக தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது. அதிமுக முடிக்கும் தருவாயில் இருக்கிறது.
இந் நிலையில் திடீர் திருப்பமாக சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த நடிகர் சரத்குமார், அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்து இருக்கிறார். நேற்று வரை அக்கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்த அவர், இப்போது திடீரென தமது கட்சியை பாஜகவுடன் இணைத்திருப்பது ஆச்சரியத்தை அளித்து உள்ளது.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது;
பிரதமர் மோடி வலிமைமிக்கவர், அவருடன் இணைந்து செயல்பட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. இதுபற்றி அண்ணாமலையிடம் பேசினேன்.
கட்சியின் நிர்வாகிகளுடனும் இணைந்து பேசினேன். அதன்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நாட்டின் நலனுக்காக கட்சியை பாஜகவுடன் இணைத்து உள்ளோம் என்று கூறினார்.