Sunday, May 04 12:04 pm

Breaking News

Trending News :

no image

அது 'ஸ்பெல்லிங்' மிஸ்டேக்…! அமைச்சர் முருகனின் 'கொங்குநாடு' விளக்கம்


சென்னை: கொங்குநாடு என்று தமது பயோடேட்டாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது, ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்து உள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன், அண்மையில் மத்திய இணை அமைச்சராக்கப்பட்டார். மத்திய அமைச்சரவையில் புதியதாக பதவியேற்ற 43 பேரில் ஒவ்வொருவரின் பயோடேட்டாவும் வெளியிடப்பட்டது.

அந்த பயோடேட்டாவில் 43 மத்திய அமைச்சர்களின் சுய விவர குறிப்பு(பயோ டேட்டா) இடம் பெற்று இருந்தது. அதில் எல். முருகனின் பயோடேட்டாவும் பதிவிடப்பட்டு இருந்தது. அதில் இடம்பெற்ற கொங்குநாடு என்ற ஒரு வார்த்தை தமிழகத்தில் பெரிதும் அதிர்வை ஏற்படுத்தியது.

தமிழகம் 2 ஆக பிரிக்கப்படுகிறது, அதன் ஒரு பகுதிதான் கொங்குநாடு என்று செய்திகள் பறந்தன. கொங்கு நாட்டில் இடம்பெறும் மாவட்டங்கள், அதன் பரப்பளவுகள், வருவாய் வட்டங்கள் என ஆளாளுக்கு இணையத்தில் விக்கிபீடியா ரேஞ்சுக்கு தகவல்களை அள்ளி தெளித்துவிட்டனர்.

கொங்கு நாடு என்ற வார்த்தை பெரும் சர்ச்சையாக உருவெடுக்க… மக்கள் விரும்பினால் அது நடக்கும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால் கொங்குநாடு என்பது உறுதிதான் என்று பாஜகவினரும், அதன் கூட்டணி கட்சியினரும் சந்தோஷத்தில் இருந்தனர்.

அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று கூறி உள்ளார் மத்திய இணையமைச்சர் எல். முருகன், மத்திய அமைச்சரான பின்னர் முதல் முறையாக அவர் சென்னை வந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எல் முருகன், கொங்குநாடு விஷயத்தில் தெளிவான பதில் சொல்லி இருக்கிறார். அவர் கூறிய பதில் இதுதான்:

தனது பயோடேட்டாவில் கொங்குநாடு என்று வேண்டும் என்று போடப்படவில்லை. அது தட்டச்சு பிழை(ஸ்பெல்லிங் மிஸ்டேக்) என்று விளக்கம் அளித்துள்ளார். இதுநாள் வரை தமிழகத்தில் கனன்று கொண்டு இருந்த கொங்கு நாடு பிரச்னைக்கும் முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். இனி பொதுவெளியில் கொங்குநாடு என்ற விவகாரம் விவாதிக்கப்படாது என்றே கூறலாம்…!

Most Popular