500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்…! தேர்தல் அறிக்கையில் கலக்கிய ஸ்டாலின்
சென்னை: தமிழகம் முழுவதும் 500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட துரைமுருகன், டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் வருமாறு:
*சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசு பணியாளர்களாக்கப்படுவர்
*நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்
*இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்
*சத்துணவு திட்டத்தில் காலையில் பால் வழங்கப்படும்
*வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டங்கள், செயலாக்கதுறை என தனி அமைச்சகம் உருவாக்கப்படும்
*ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிகையை விரைவில் பெறுவோம்
*முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
*விவசாய துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
*இந்து கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா ரூ1,000 வழங்கப்படும்
*மருத்துவ படிப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்- திமுக தேர்தல் அறிக்கை
*ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
*வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கான தனியார் துறை உருவாக்க்கப்படும்.