Sunday, May 04 01:11 pm

Breaking News

Trending News :

no image

உயிருக்கு போராடும் திமுக விஐபியின் மனைவி…! கவலையில் உடன்பிறப்புகள்…!


சென்னை: திமுக எம்பி ஆ ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

திமுக துணை பொது செயலாளரும், அக்கட்சியின் எம்பியுமாக இருப்பவர் ஆ ராசா. கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இவர் கடந்த சில நாட்களில் முக்கிய நிகழ்வுகளில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இப்போது அது உண்மை இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.

அவரது மனைவி பரமேஸ்வரியின் உடல்நிலை கடந்த 6 மாதங்களாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அதற்கான சிகிச்சையும் அவர் எடுத்து வந்தார். இந் நிலையில் அவரது உடல்நிலை இப்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல ரேலா மருத்துவமனையில் அவர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

கீமோதெரபி சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், வென்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரி சிகிச்சையில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பரமேஸ்வரியின் உடல்நிலை சீரியசாக இருப்பதாக தகவல் கிடைக்க ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்து ஆ ராசாவுக்கு ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Most Popular