எப்படி இருக்கிறார் ஸ்டாலின்…? இதோ லேட்டஸ்ட் நிலவரம்..!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் தேறி வருகிறார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் கூறி இருக்கிறது.
உடல்சோர்வாக இருக்கிறது, பரிசோதித்துக் கொண்ட போது கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருந்தார். அதன் பின்னர் வீட்டு தனிமையில் இருந்த அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில் அவரது உடல்நலம் பற்றிய தகவலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வாயிலாக வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
முதலமைச்சருக்கு கொரோனா வழிமுறைகளின் படி சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணம் பெற்று வருகிறார். உடலும் நன்றாகவே இருக்கிறது.
மேலும் சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் அனேகமாக இரண்டொரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.