#ThoothukudiFloods டிவி பாத்த எடப்பாடி… பின்னி பெடலெடுத்த #Stalin
தூத்துக்குடி வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளை குறை சொல்லிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பின்னி பெடலெடுத்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வரலாறு காணாத மழையை, வெள்ளத்தை சந்தித்து இருக்கிறது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 6000 ரூபாய் நிவாரணம் தருவதாகவும் அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, வெள்ள நிவாரணம், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். அப்போது செய்தியாளர்களில் ஒருவர், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறை கூறியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில்;
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்தப்போ, டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்னாரே… அவரா? என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோவை திமுக ஐடி விங் DMK IT Wing தமது இணைய பக்கத்தில் ரிலீஸ் செய்து அசால்ட் காட்டி இருக்கிறது.
வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.