Sunday, May 04 01:11 pm

Breaking News

Trending News :

no image

திடீர் வதந்தி…! அழகிரி மகன் எப்படி இருக்கார்..?


சென்னை: அழகிரி மகன் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து பலவித செய்திகள் உலா வந்து கொண்டிருக்க, மருத்துவர்கள் கூறியது என்ன என்பது பற்றிய தகவல் கசிந்திருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த சகோதரர் முக அழகிரி மகன் துரை தயாநிதி. சென்னையில் உள்ள தமது வீட்டில் எதிர்பாராத விதமாக  மயங்கி சரிந்தார். உடனடியாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

அவருக்கு கடந்த 7ம் தேதி முக்கியமான அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது 2வது முறையாக அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மூளைக்கு செல்லும் நரம்புகளில் உள்ள ரத்த அடைப்பை சரி செய்ய இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

துரை தயாநிதியின் உடல்நிலை பற்றியும், மருத்துவர்கள் கூறும் தகவல்கள் என்ன என்று அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். இந் நிலையில் அவர் மருத்துவ ரீதியாக கோமா நிலையில் வைக்கப்பட்டு உள்ளார் என்றும், சிகிச்சை தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து தகவல்கள் வெளி வந்துள்ளன.

இது ஒரு ஆழ்ந்த உறக்க நிலை… அதாவது உடல்நலனை முக்கியமாக கருத்தில் கொண்டு தற்காலிகமாக இப்படி தூண்டப்பட்ட கோமா நிலையில் வைத்துள்ளனர் என்று மருத்துவர்கள் தரப்பில் இருந்து விளக்கங்கள் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

அடுத்து வரக்கூடிய நாட்களில் அவரின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை பார்த்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லலாமா? என்றும் பேச்சுகள் குடும்பத்தில் ஓடிக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதுவாக வேணும்னாலும் இருக்கட்டும், அண்ணன் மீண்டும் குணம் பெற்று வரவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள், குடும்ப நண்பர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Most Popular