டுவிஸ்ட்…! அமித் ஷா செருப்பை கையில் எடுத்த பாஜக தலைவர்…!
செகந்திராபாத்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காலணிகளை பாஜக தலைவர் ஓடிபோய் கைகளில் எடுத்து வந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார். உஜ்ஜையினி மகா காளி கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார். பின்னர் கோவிலில் இருந்து வெளியேறினார்.
அப்போது தான் ஒரு சம்பவம் நடந்தது. தெலுங்கான எம்பி, பாஜக தலைவர் பொறுப்பில் இருக்கும் பண்டி சஞ்சய் குமார் விடுவிடுவென எங்கேயோ ஓடி சென்றார். அமித் ஷாவின் காலணிகளை கைகளில் தூக்கி கொண்டு வந்தார்.
அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ கடும் சர்ச்சை எழுந்துள்ளது. குஜராத் தலைவர்களின் அடிமை என்ற இந்த வீடியோ குறித்து கருத்து கூறி உள்ளார் டிஆர்எஸ் கே.டி. ராமராவ்.
இந்த அடிமைத்தனத்தை நாட்டு மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர். தெலுங்கானா மாநில சுயமரியாதையை சேதப்படுத்தும் யாரையும் மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அவர் கூறி உள்ளார்.