டாக்டர்… ஆபரேஷன் முடிஞ்சிடுச்சில்ல…? கையோடு யாஷிகா செய்த காரியம்..! ரசிகர்கள் ஷாக்
சென்னை: விபத்தின் காரணமாக மருத்துவமனையில் இருக்கும் யாஷிகா, ஆபரேஷன் முடிந்த கையோடு செய்த செயல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த வாரம் தமிழ் சினிமா உலகம் பரபரத்தது. காரணம் இளம் நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கினார். அவரது தோழி இந்த விபத்தில் பலியாக யாஷிகாவின் நிலைமை குறித்து தாறுமாறான தகவல்கள் பரவின.
விபத்தில் வள்ளி செட்டி பவானி உயிரிழக்க ஒட்டு மொத்த யாஷிகா குடும்பமும் நிலைகுலைந்து போனது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யாஷிகா ஆனந்த் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்த விபத்து குடிபோதையில் நிகழவில்லை என்று மருத்துவர்களின் அறிக்கையும், காவல்துறை விசாரணையும் உறுதிப்படுத்தினாலும் நெட்டிசன்ஸ் அதை நம்ப தயாராக இல்லை.
அவர்கள் இஷ்டத்துக்கு தெரிந்த கதை, தெரியாத விஷயம் என அனைத்தையும் கலந்து கட்டி அடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது.
அது நடந்த கையோடு ஒரு முக்கிய காரியத்தை தமது இன்ஸ்டாகிராம் பதிவில் செய்திருக்கிறார் அவர். யாஷிகா தமது சமூக வலை தளத்தில் கூறி இருப்பதாவது:
சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக வதந்தி பரப்புகிறார்கள். இப்படி சீப்பாக நடந்து கொள்ளும் அனைவருக்கும் ஒன்று கூறுகிறேன். குடிக்கவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்திவிட்டனர்.
ஒருவேளை அப்படி குடித்துவிட்டு வண்டி ஓட்டி இருந்தால் நான் இப்போது சிறையில் தான் இருந்திருப்பேன். மருத்துவர்கள் அறிக்கையிலும் நாங்கள் குடிக்கவில்லை என்று தெளிவாக உள்ளது.
இப்படி பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும். என் பெயருக்கு களங்கம் விளைவித்ததால் 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு வழக்கு தொடர்ந்தேன். வதந்தி பரப்புவோர் என்ன வேண்டுமானாலும் செய்வர் என்று காட்டமாக கூறி உள்ளார்.