கேஸ் ரூ.500, பெட்ரோல் ரூ.75….!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திமுகவின் தேர்தல் அறிக்கை ரிலீசாகி இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ள வாக்குறுதிகள் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சற்றே யோசிக்க வைத்துள்ளன.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;
மாநில முதலமைச்சர்கள் ஆலோசனையின் பேரில் ஆளுநர் நியமனம்.
ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் தரும் 361 சட்டப்பிரிவு நீக்கம்.
சுப்ரீம்கோர்ட் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து.
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்.
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை.
புதிய கல்விக்கொள்கை ரத்து.
பெண்களுக்கு 33 சதவீதம் உடனடி அமல்.
நாடு முழுவதும் தமிழகத்தின் காலை உணவு திடடம் விரிவாக்கம்.
அனைத்து மாநிலங்களிலும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் நீக்கம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ஜிஎஸ்டி சட்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படும்.
மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து.
ஒரே நாடு, ஒரே தேர்தல் கைவிடப்படும்.
கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக வினியோகிக்கப்படும்.
பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75, டீசல் ரூ.65க்கு விற்கப்படும்.
----