தலைவர் நித்தியானந்தாவே வெளியில் தான் இருக்காரு..! பப்ஜி மதன் ‘லீக்’ ஆடியோ
சென்னை: தலைவர் நித்தியானந்தாவே வெளியில் தான் இருக்காரு… போலீசால் என்னை பிடிக்க முடியாது என்று பப்ஜி மதன் பேசியிருக்கும் ஆடியோ லீக் ஆகி இருக்கிறது.
யுடியூப் சேனலை நடத்தி வரும் மதன் என்பவர் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றது என்பது புகார். அதே போல தன்னுடன் செல்போனில் பேசும் பெண்களிடம் ஆபாசமாக உரையாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போலீசாரின் கண்களில் சிக்காமல் தலைமறைவாக இருக்கிறார் மதன். அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனால் தலைமறைவாக உள்ள மதன், தமது ரசிகைகளுடன் பேசியிருக்கும் ஆடியோ லீக்காகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அந்த ஆடியோவில் மதன் போலீசாருக்கு முடிந்தால் பிடி என்பது போல் சவால் விடுத்துள்ளார்.
அவரது பேசிய உரையாடலின் விவரம் இதோ:
ரசிகை: உங்களின் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்களே…?
மதன்: என் போட்டோவை வெளியிட்டு உள்ளனர். அதின் என் அண்ணன் போட்டோவும் இருக்கிறது. இதை எல்லாம் ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரசிகை: உங்களை போலீசார் பிடித்து விடுவார்களா..? யுடியூப் சேனல் முடங்கி விடுமா..?
மதன்: அதுக்கு சான்சே இல்லை. நான் நம்பர் ஒன் லாயர்சை வைத்து இருக்கிறேன். டெல்லியிலும் லாயர்ஸ் இருக்கிறார்கள். நான் ஜெயிலுக்கு போவதற்கு சான்சே கிடையாது. நான் ஜெயிலுக்கு போய்விட்டால் மறுபடியும் வந்து யுடியூப் சேனலை ஆரம்பிப்பேன். அதன் பெயர் மதன் யுடியூப் சேனல் என்று பேர் வைப்பேன். எல்லாரையும் கிழிகிழி என்று கிழிப்பேன்.
ரசிகை: இதுக்கு போய் அரெஸ்ட் பண்ணுவாங்களா..?
மதன்: நம்ம தலைவர் நித்தியானந்தாவே வெளியில் தான் இருக்கிறார். அப்படி இருக்கும் போது என்னை கைது பண்ணிவிடுவார்களா என்ன? அதுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.
இப்படியே அந்த உரையாடல் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த உரையாடலை வைத்து இப்போது சைபர் க்ரைம் போலீசார் மதனின் இருப்பிடத்தை கண்டறிய களத்தில் இறங்கி உள்ளனர்.