எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பது கஷ்டம்…? வந்தாச்சு புது ரூல்…
டெல்லி: எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
முன்பெல்லாம் எத்தனை முறை வேண்டுமானாலும் டெபிட் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடிந்தது. பின்னர் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு பிறகு டெபிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் பிடிக்கப்பட்டது.
இப்போது ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு புதிய விதிகளை எஸ்பிஐ வெளியிட்டு உள்ளது. அதாவது 10 ஆயிரம் ரூபாய் ஏடிஎம்மில் எடுக்க வேண்டும் என்றால் அந்த கணக்கு வைத்திருப்பவரின் பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு OTP எண் அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஓடிபி எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் உள்ளீடு செய்தால் அதாவது டைப் செய்தால் அது சரிபார்க்கப்பட்டு அதன் பின்னரே பணம் எடுக்க முடியும். தவறாக ஒடிபியை பதிவு செய்தாலோ அல்லது ஓடிபி இன்றியோ பணம் ஏடிஎம்மில் இருந்து எடுக்க முடியாது.
வாடிக்கையாளர்களின்ஏடிஎம் அட்டைகளை திருடி மற்றவர்கள் பணம் எடுப்பதை தடுக்கவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மற்ற வங்கிகளிலும் இந்த முறை விரைவில் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.