கண்டுபிடிக்க முடியுதா..? 15 வயசுல.. அந்த சினிமா பிரபலத்தின் 'சீக்ரெட்' போட்டோ…!
சென்னை: 15 வயதில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி எப்படி இருந்தார் என்ற போட்டோ வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் ஆதர்ஷ பாடகர் எஸ்பிபி. யாருக்கு எப்படி பாட வேண்டும்? என்ன குரல் வளத்துடன் தயாராக வேண்டும் என்பதில் எஸ்பிபிக்கு நிகர் அவர் தான்.
தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்ல, மலையாளம், கன்னடம், இந்தி, என பல மொழிகளில் பாடி முன்னணி பாடகராக வலம் வந்தவர். கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களை பாடி இருக்கிறார் எஸ்பிபி.
16 மொழிகளில் பாடகர், சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட், நல்ல நடிகர் என பல பரிணாமங்களை கொண்ட எஸ்பிபி கொரோனா தொற்றால் காலமானார். அவரது மரணம் திரையுலக ரசிகர்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியது.
அவரது மரணத்தை இன்னமும் ஏற்க முடியாத பலரும் எஸ்பிபியின் பாடல்களை கேட்டு அவருக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் எஸ்பிபியின் ஒரு போட்டோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த போட்டோ இளம் வயதில் எடுத்தது. அப்போது எஸ்பிபிக்கு வயது 15 தான். அரைக்கை கட்டம் போட்ட சட்டை, மீசை முளைக்காத அரும்பு பருவம், சிவப்பான ஒல்லியான உடல்வாகு என ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளார். போட்டோவை பார்க்கும் பலரும் ஒரு நிமிடம் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.