வேறு எந்த டிரெஸ்சும் கிடையாது… ஒரு துண்டு மட்டும்தான்…! பிரபல பள்ளி ஆசிரியரின் பாலியல் சேட்டைகள்….
சென்னை: சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் பாலியல் புகாரில் சிக்கி இருக்கும் ஆசிரியர் வெறும் ஒரேயொரு துண்டை கட்டிக் கொண்டு பாடம் நடத்துவார் என்ற அதிர்ச்சிக்கர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழக அளவில் மிகவும் பிரபலமான பள்ளி சென்னை கேகே நகரில் இருக்கும் பத்மசேஷாத்திரி பள்ளி. அந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மீது அதே பள்ளி மாணவிகள் முன் வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பெற்றோர்களை மிரள வைக்கின்றன.
ஆசிரியர் ராஜகோபாலன் செய்த பாலியல் சேட்டைகள் என்ன என்பது பற்றி பள்ளி டீன் ஷீலா ராஜேந்திரனுக்கு முன்னாள் மாணவர்கள் அமைப்பானது கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பல விஷயங்கள் கர்மம், கர்மம் என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக இருக்கிறது.
மிக தெளிவான ஆங்கிலத்தில் ஆசிரியர் ராஜகோபாலனின் சேட்டைகள் ஒவ்வொன்றையும் அந்த கடிதம் தோலுரித்து காட்டி இருக்கிறது. குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள ஆசிரியர் கணக்கு பதிவியல், வணிகவியல் பாடம் எடுப்பவர். 20 ஆண்டுகால அனுபவம் என்றால் தமது பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ளவே மாணவிளை பயன்படுத்தி உள்ளார் என்பது கடிதத்தில் தெரிய வந்திருக்கிறது.
மாணவர்களிடம் பாடம் நடத்தும் போது ஆபாசமாக, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவாராம், அதிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ள தருணத்தில் அவர் செய்த சேட்டைகள் வேற ரகமாம். ஆன்லைன் வகுப்பின் போது இடுப்பில் அவர் அதிகபட்சம் வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு தான் பாடம் எடுத்திருக்கிறாராம்… அப்போது பாலியல் தொடர்பான ஜோக்குகளை வேறு பேசி மாணவிகளை நெளிய வைப்பாராம்.
இது போதாது என்று மாணவிகளுக்கு தனியாக வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பி பேசி இருக்கிறாராம். அனைத்து குற்றச்சாட்டுகளையும் பட்டியலிட்டுள்ள முன்னாள் மாணவர் அமைப்பு கடும் நடவடிக்கை வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளது.