சாதித்த ஈபிஎஸ்..! இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு…!
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராள எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்துள்ளது.
காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம், 9 மணிக்கு கோர்ட் தீர்ப்பு என்று அதிமுக இதுவரை சந்திக்காத பிரச்னைகளை எதிர்கொண்டது. கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கட்சியின் பொது செயலாளர் என்ற பதிவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இடைக்கால பொதுச் செயலாளராக ஒரு பக்கம் ஈபிஎஸ் தேர்வாக, நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த 4 மாதங்களுக்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.