என்ஜாய் எஞ்சாமி பாடகி தீ… அப்பா யார்..? இணையத்தில் தீயாய் ஒரு தகவல்
இளம்பாடகி தீ யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற சுவாரசிய தகவல் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல். இந்த பாடலை பாடியவர் இளம்பாடகி தீ என்னும் தீட்சிதா.
1998ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இலங்கை தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். அவரின் தந்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அம்மா மீனாட்சி அய்யரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணை மறுமணம் செய்து கொண்டார்.
பள்ளிக்காலங்களில் சந்தோஷ் நாராயணனின் ஆல்பங்களில் பாடியவர். பீட்சா 2 வில்லா மற்றும் குக்கூ படங்களில் பாடல்களை பாடி அறிமுகமானார். 2014ல் சந்தோஷ் நாராயணன் இசையில் மெட்ராஸ் படத்தில் நான் நீ என்ற பாடலை பாடி பிரபலமானார்.
2016ல் இறுதிச்சுற்று படத்தில் என் சண்டைக்காரா, உசுரு நாரம்பேலி பாடல்களை பாடி இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் இறைவி, குரு, மேயாத மான், காலா, வட சென்னை ஆகிய படங்களில் பாடி உள்ளார்.
காலா படத்தில் கண்ணம்மா கண்ணம்மா பாடலால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். யுவன் சங்கர் ராஜா இசையில் ரவுடி பேபி பாடலை பாடி அசத்தியவர். நேர் கொண்ட பார்வை படத்தில் வானில் இருள், சூரரை போற்று படத்திலும் பாடி ரசிகர்களை கவர்ந்தவர்.