60 நாட்களாகியும் நடக்காத விஷயம்…! முல்லை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு கோர்ட் உத்தரவு
சென்னை: முல்லை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.
தொலைக்காட்சி தொடர் நாயகி சித்ரா, கடந்த டிசம்பர் 9ம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத், டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவர் தமக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டது.
இந் நிலையில், சித்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹேம்நாத் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால், நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.