வனிதாவின் அண்ணன் தான் நடிகர் விஜய்யின் நண்பர்…! தீயாய் வெளியான உண்மை
சென்னை: நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ், நடிகை வனிதாவின் அண்ணன் என்ற போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை வனிதா. அண்மையில் கூட 4வது கல்யாணம் செய்து கொண்டார் என்று செய்தி பரவியது. வட இந்தியர் ஒருவரை காளி கோயிலில் திருமுணம் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று பின்னர் தெரியவந்தது.
சர்ச்சைகள் இருந்தாலும் அதை எல்லாம் பின்னுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு தமது இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை வனிதா. இப்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கல்யாணத்துக்கு சென்றிருந்த வனிதா, நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர், நடிகர் சஞ்சீவுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவில் தமது அண்ணனுடன் இருக்கிறேன், சஞ்சீவ் தமது அம்மா மஞ்சுளாவின் உடன்பிறந்த சகோதரி ஷ்யாமளாவின் மகன், எனது சகோதரர் என்று கூறி உள்ளார்.
நடிகர் சஞ்சீவ், நடிகர் விஜய்யின் கல்லூரி கால தோழர். அவர் நடிக்கும் திரைப்படங்களில் நிச்சயம் ஒரு கதாபாத்திரம் சஞ்சீவுக்கு உண்டு. திரைப்படங்கள் மட்டுமல்லாது திருமதி செல்வம் சீரியலிலும் நடித்து பாராட்டுகளை பெற்றவர். வனிதா வெளியிட்டு உள்ள இந்த போட்டோ தான் இணையத்தில் வெகுவாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.