சொந்த ஊர் போகணுமா..? தமிழக அரசின் சூப்பர் ஏற்பாடு….!
சென்னை: முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றானது கை மீறி விடும் நிலைக்கு சென்றுவிட்டது போன்று காணப்படுகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி அளிக்கிறது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக்ததில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மருத்துவ நிபுணர்கள், அனைத்து கட்சி எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பலத்த ஆலோசனைகளுக்கு பிறகு தளர்வுகள் அற்ற கடுமையான ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருந்தகங்கள், பாலகங்கள் தவிர மற்ற அத்தியாவசிய கடைகள் முற்றிலும் அடைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்த பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.