அது என்ன? எனக்கு ஒரு சட்டம், அமைச்சர்களுக்கு ஒரு சட்டமா..? பாய்ந்த பாஜக முருகன்
கோவை: எனக்கு ஒரு சட்டம்… அமைச்சர்களுக்கு ஒரு சட்டமா? அவர்கள் மீதும் வழக்கு போடுங்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறி உள்ளார்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கள்ளக்குறிச்சியில் பாஜக அலுவலக திறப்பு விழாவில் கூட்டம் கூடியதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 300 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எல். முருகன் கூறியதாவது: அதிமுக அமைச்சர்கள், மற்ற கட்சி பிரமுகர்கள் என அனைவரும் மாவட்டங்கள் தோறும் சென்று கூட்டம் நடத்துகின்றனர்.
வழக்கு பதிய வேண்டும் என்றால் அவர்கள் மீதும் வழக்கு போட வேண்டும். தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகி உள்ளது. 60 தொகுதிகளில் பாஜக நின்றாலே வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் வரவேற்போம். சசிகலாவின் சொத்து முடக்கத்தில் எவ்வித அரசியலும் இல்லை என்று கூறினார்.