தமிழகத்தில் முதல் முறை..! வீட்டில் இருந்தே வீடியோவில் புகார் சொல்லலாம்..! ‘மாஸ்’ கலெக்டர்
கரூர்: கரூர் மாவட்ட பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே காணொளி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் பிரபு சங்கர் கூறி உள்ளார்.
கொரோனா காரணமான ஆட்சியர் அலுவலங்களில் அனைத்து திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வீட்டில் இருந்து காணொளி காட்சி மூலம் பங்கேற்று குறைகளை தீர்த்துக் கொள்ள bharatVC என்ற செயலியை பயன்படுத்தலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறி உள்ளார்.
செல்போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.
இது குறித்து ஆட்சியர் பிரபு சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி குறைதீர் கூட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.
இனி வரும் திங்கட்கிழமை முதல் இவ்வாறு நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் தான் முதலில் காணொளிக் காட்சி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.