நாளை நீட் தேர்வு…! மாணவி ஜோதி துர்கா இன்று காலை செய்த செயல்…!
மதுரை: மருத்துவ படிப்புக்காக நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
மதுரை மாவட்டம், ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வருபவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா, 12ம் வகுப்பு முடித்து நீட் தேர்வுக்குக்காக தயாராகி வந்தார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்த மாணவி, இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா இன்று காலை தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த போலீசார் மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் விபரீத முடிவு எடுக்க வேண்டாம் என்றும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கல்வி அவசியம் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.