கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இருந்து விலகிய அந்த கட்சி…!
சென்னை: கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி திடீரென விலகி உள்ளது.
எழுச்சிமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நீட்சியாக உருவானது தமிழ்நாடு இளைஞர் கட்சி. தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் அண்மையில் இணைந்தது.
இந் நிலையில் அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு இளைஞர் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த கட்சி, நேர்மையாளர் கூடாரம் சகாயம் கட்சியுடன் இணைவதாகவும், ஒன்று படுவோம், வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டு உள்ளது. சகாயம் ஐஏஎஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் கூறி உள்ளது.