நீங்க மாணவரா..? தமிழக அரசின் சூப்பர் சலுகை..இதோ..!
சென்னை: கல்லூரிகளுக்கான ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆக.1 முதல் ஆக.10 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகிவிட்டன. ஒரு பேட்டியின் போது கூட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் உங்களுக்கு தெரியாமல் வெளியாகிவிட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கோபம் அடைந்த அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்காமல் விருட்டென்று வெளியேறியது நினைவிருக்கலாம். இந் நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். அவர் கூறி இருப்பதாவது: ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூலை 25 - ஆக.5 வரை என்ற அவகாசத்துக்கு பதிலாக ஆக.1 முதல் ஆக.10 வரை மாற்றப்பட்டுள்ளது.
http://tngasa.in என்ற இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசு இந்த சலுகையை அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.