VIRAL VIDEO மிட் நைட்…! வீதிக்கு வந்த கமிஷனர்…!
சென்னை: சென்னையில் கொட்டும் மழையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிரடி ஆய்வில் ஈடுபட்டது, பாராட்டுகளை பெற்றுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி வருகிறது. தலைநகர் சென்னையும் மழைக்கு வழக்கம் போல் தப்பவில்லை.
நேற்று மாலை தொடர்ந்து மழையில் குளிரடித்து வரும் சென்னையில் கிண்டி, அடையாறு, நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், எழும்பூர் பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்து தள்ளியது.
மழை நீர் ஒரு பக்கம் தெருக்களில் வழிந்து, மக்கள் அல்லல்பட மறுபக்கம் அதிகாரிகள் களத்தில் இறங்கி கண்காணிப்பில் ஈடுபட்டனர். வழக்கமாக மக்கள் பிரச்னை என்றால் நேரடியாக களம் காணும் ஐஏஎஸ் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் இம்முறையும் அதிரடி காட்டி உள்ளார்.
காமராஜர் சாலை, புளியந்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக தகவல் வர, நேரிடையாக அங்கு சென்றார். மழைநீர் வடிய நடவடிக்கை எடுத்த அவர், அதிகாரிகளுடன் கொட்டும் மழையில் நடந்த படியே அனைத்து பணிகளையும் பார்வையிட்டார். மேலும் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அவரின் இந்த நடவடிக்கை தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.