Sunday, May 04 11:46 am

Breaking News

Trending News :

no image

லடாக்கில் ஒரே வாரத்தில் 2வது முறை நிகழ்ந்த சம்பவம்…! மக்கள் பீதி…!


லே: லடாக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட, மக்கள் பீதியடைந்தனர்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்க, உறங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்தனர்சேதம் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.  

ஒரு வாரத்தில் 2வது முறையாக லடாக்கில் லேசான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அடுத்தடுத்து நிகழும் நிலநடுக்கம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

Most Popular