ஆன்லைனில் போலீஸ் தேர்வு...! விரைவில் அறிவிக்க ஏற்பாடு என தகவல்..?
சென்னை: போலீஸ் எஸ்ஐ, 2ம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
2019ல் நடைபெற்ற 8,888 இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களில் 8,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. அதன் பின்னர்பட்ஜெட் கூட்ட தொடரில் 10 ஆயிரம் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் தேர்வு நடத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவி விடும். இதையடுத்து, தற்போது 2ம் நிலை காவலர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.