Sunday, May 04 12:13 pm

Breaking News

Trending News :

no image

#Vijayakanth மறக்காம இதை பாருங்க…!


தாம் எப்படிப்பட்ட நபர், தம்மை மற்றவர்கள் எப்படி மதித்தனர் என்பதை விளக்கி பேசும் விஜயகாந்த் விடியோவை பார்ப்பவர்கள் கண்கலங்கி வருகின்றனர்.

நடந்திருக்கவே கூடாது, ஆனால் நடந்துவிட்டதே என்று தமிழகமே கதறும் வண்ணம் உள்ளது கேப்டன் விஜயகாந்தின் மறைவு. தமிழ் தனது உயிர்மூச்சு என்று மக்களுக்காக வாழ்ந்த அவரின் மூச்சு நேற்று காலை 6.10 மணியளவில் அடங்கியது.

தீவுத்திடலில் வைக்கப்பட்டு உள்ள அவரது உடலை காண திரளும் கூட்டம் அடங்கவில்லை. கனத்த மனதுடன், கண்ணீர் வழிய வழிய கதறி துடிக்கின்றனர் தொண்டர்களும், ரசிகர்களும். அதே நேரம் அவர் கடந்த காலங்களில் பேசிய பேச்சுகள் அடங்கிய வீடியோ பலரை இன்னமும் தூங்கவிடாமல் துடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.

குறிப்பாக, தம்முடன் சினிமாவில் நடிக்க மறுத்த நடிகைகள், படம் எடுக்க தயங்கிய தயாரிப்பாளர்கள், தமக்கு வாழ்வளித்தவர்கள்,அரசியல் நகர்வுகள் குறித்து விஜயகாந்த் பேசும் வீடியோ தான் இணையத்தில் பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

அந்த உணர்ச்சிமிக்க, உணர்வுப்பூர்வமான செய்தியின் வீடியோ கீழே இணைக்கப்பட்டு உள்ளது.

Most Popular