மறைந்தார் அதிமுக முக்கிய தலைவர்…! அரைக்கம்பத்தில் கட்சி கொடி
சென்னை: அதிமுக அவை தலைவரும், கட்சியின் சீனியருமான மதுசூதனன் காலமானார். அவருக்கு வயது 80.
அதிமுக அவைத்தலைவர், முன்னாள் அமைச்சர், எம்ஜிஆர் விசுவாசி, கட்சியின் சீனியர் என பல படிநிலைகளில் உள்ளவர் மதுசூதனன். அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் பின்னர் உடல் நலம் தேறினார்.
வயது முதிர்வு காரணமாக, வீட்டில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகள் செய்து வந்தார்.
இந் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் அவரது உடல்நலம் திடீரென மோசம் அடைய சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று பிற்பகல் 3.42 மணியளிவில் காலமானார்.
1991ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் பணியாற்றியவர். 2010ம் ஆண்டு முதல் அவைத்தலைவராக இருந்தவர். அவரின் மறைவு கட்சியை கடுமையாக பாதித்துள்ளனர். ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.
மதுசூதனன் மறைவை அடுத்து, இன்று முதல் வரும் 7ம் தேதி வரை கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.