அமைச்சரவை ராஜினாமாவா…? நெவர்…! படம் காட்டும் நாராயணசாமி…!
புதுச்சேரி: பெரும்பான்மையை நிரூபிப்போம் என்பதால் அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்காமல் பாஜக விடாது போல தோன்றுகிறது. பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக நியமிப்பது, துணை நிலை ஆளுநர் மூலமாக அரசுக்கு நெருக்கடி கொடுப்பது என்று நாராயணசாமி ஆட்சி தொடர்ந்து சவால்களை சந்தித்து வந்தது.
தற்போது காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களான நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் என 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் நாராயணசாமி ஆட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, அரசுக்கு பெரும்பான்மை உள்ளதால் ராஜினாமா என்ற பேச்சுக்கு இடமில்லை என்று கூறி உள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.