ரஜினியுடன் தேர்தலில் கூட்டணி..? அமித் ஷா சொன்ன வியூகம்
டெல்லி: ரஜினியுடனான கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார்.
கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள் துறை அமைச்சர் அமித் ஷா வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் உள்ளார். பீகார் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் வட இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்து இருந்தார்.
அப்போது தமிழகத்தில் வரப்போகும் சட்டசபை தேர்தல், பாஜக வியூகம், ரஜினியின் அரசியல் வருகை உள்ளிட்ட பவ விஷயங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:
எனது உடல்நிலை நன்றாகவே உள்ளது. வழக்கமான அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி வருகிறேன். தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவுல்லை. அதற்கு இன்னும் சிறிது காலம் உள்ளது. ரஜினிகாந்தும் தமது அரசியல் வருகை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
ஆனாலும் ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கட்சியை பலப்படுத்த வேண்டி உள்ளது. அதிமுகவுடன் 2 தேர்தலில் கூட்டணியாக சந்தித்து உள்ளோம் என்று கூறினார்.